விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், நீத்து வீட்டிற்கு சென்ற விஜயாவும் சிந்தாமணியும், மனோஜுக்கு நீத்துவை திருமணம் செய்து வைக்கும் நோக்கில் பேசுகின்றனர்.
ஆனால், நீத்து தான் ரவியை காதலிப்பதாகவும், அவனையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் உறுதியாக தெரிவிக்கிறார். விஜயா பலமுறை பக்குவமாக எடுத்துச் சொல்லியும் நீத்து கேட்காமல், ரவிக்கும் ஸ்ருதிக்கும் டிவோர்ஸ் வாங்கிக் கொடுக்குமாறு கூறுகிறார். இதைக் கேட்டு கடும் கோபமடைந்த விஜயா, அங்கிருந்து வெளியேறி விடுகிறார்.
இதற்குப் பிறகு, ஜோசியம் பார்க்கும் பெண் ஒருவர் மனோஜின் ஸ்டோர் ரூமுக்கு வந்து, “உங்களுக்கு முதல் மனைவியுடனே மீண்டும் திருமணம் நடக்கும்” என்று கூறுகிறார். இந்த வார்த்தைகளை கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்.

பின்னர், அந்த ஜோசியக்காரி ரோகிணி அனுப்பிய ஆள் என்பதும், அவர் சொன்னபடி பேசினதற்காக ரோகிணி பணம் கொடுப்பதும் தெரியவருகிறது. மனோஜுக்கு ஜோசியம் மீது நம்பிக்கை இருப்பதை பயன்படுத்தி, அவரை மடக்க திட்டம் போடுகிறார் ரோகிணி.
இதனைத் தொடர்ந்து, சத்தியாவுடன் சிந்தாமணி மகள் மீனா நடத்தும் பூக்கடைக்கு சென்று ஆர்டர் கொடுக்கிறார். அப்போது அங்கு வந்த சிந்தாமணி, “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று மகளிடம் கேள்வி கேட்டு விசாரிக்கிறார்.. மேலும், மீனாவுக்கு முடிவுகட்ட புதிய திட்டம் ஒன்றையும் மனதில் தீட்டுகிறார்.
Listen News!