• May 01 2026

வேளாங்கண்ணி மாதாவே..! நான் CM ஆகிடனும்.!! விஜயின் அடுத்த நகர்வுகள் இதுதான்..

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், தவேக தலைவர் விஜய் பல்வேறு வழிபாட்டு தளங்களுக்கு தொடர்ந்து சென்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் சீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்த விஜய், அடுத்ததாக இன்னும் இரண்டு புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி அன்னை மாதா பேராலயத்தில் நாளை மே 2ஆம் தேதி அதிகாலை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் தவிக்க தலைவர் விஜய் நேரில் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு மதத்தினரும் புனிதமாக போற்றும் இந்த தேவாலயத்தில் அவர் சிறப்பு வழிபாடு நடத்துவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.


வேளாங்கண்ணி வழிபாட்டை தொடர்ந்து, நாகூரில் உள்ள புகழ்பெற்ற தர்காவிற்கும் விஜய் சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

முஸ்லிம்கள் மட்டுமின்றி பல்வேறு சமுதாயத்தினரும் வந்து வேண்டுதல் வைக்கும் இந்த தர்காவிற்கு அவர் செல்வதும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

தேர்தலுக்கு பிறகு ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் என மூன்று முக்கிய மதங்களின் வழிபாட்டு தலங்களுக்கும் விஜய் சென்று வருவது, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய தனது அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Advertisement

Advertisement