பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ரெஸ்டாரெண்ட் ஓனர் பாக்கியாவப் பாத்து நீங்களே கவுன்சிலர் கிட்ட போய் இனிமேல் இங்க எல்லாம் வரவேண்டாம் என்று சொல்லுங்க என்கிறார். மேலும், ஏதாவது பிரச்சன பண்ணி கடைய உடைச்சுவிட்டாங்க என்றால் என்ன பண்ண முடியும் என்று கேக்கிறார். அதைக் கேட்ட செல்வி என்ன அக்கா இந்த ஆளு இப்படி இருக்காரு இவரை நம்பி எப்படி கடையை நடத்துறது என்கிறார்.
இதனைத் தொடர்ந்து பாக்கியா ஓனர் கிட்ட பேசிப்பாக்கலாம் என்று தான் நினைச்சன் ஆனா பேசுறதில ஒரு பிரயோசனமும் இல்ல என்று இப்பதான் புரியுது என்கிறார். மேலும் இனி ஏதாவது பிரச்சன வந்தால் நாமளே பாத்துக்கலாம் என்று சொல்லுறார். அதனை அடுத்து இனியா ரெஸ்டாரெண்டுக்கு வந்து நிக்கிறார். அதைப் பார்த்த பாக்கியா சந்தோசமா இனியா கிட்ட போய் ஏதாவது சாப்பிடுறியா என்று கேக்கிறார். அதுக்கு இனியா எதுவுமே வேணாம் என்று சொல்லுறார்.
பின் பாக்கியா இனியாவப் பாத்து வீட்டில ஏதும் பிரச்சனையா என்று கேக்கிறார். அதுக்கு இனியா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்கிறார். இதனைத் தொடர்ந்து ஆகாஷ் செல்வியைப் பார்ப்பதற்காக ரெஸ்டாரெண்டுக்கு வந்து நிக்கிறார். அப்ப செல்வி நீ எதுக்கு இங்க எல்லாம் வந்தனீ என்று கேக்கிறார். இதனை அடுத்து ஆகாஷ் பாக்கியாவப் பாத்து அந்த கவுன்சிலர் திரும்ப ஏதும் பிரச்சனை பண்ணவரோ என்று கேக்கிறார்.
இதைத் தொடர்ந்து எழில் அமிர்தாவிற்கு நிறைய வேலை கொடுக்க வேணாம் என்று ஈஸ்வரியைப் பேசுறார். மேலும், ஜெனி எந்த வேலையும் செய்யுறேள அவங்கள நீங்க பேசுறேல அமிர்தாவ மட்டும் ஏன் பேசுறீங்க என்று கேக்கிறார். பின் செழியன் ஜெனியைப் பாத்து என்ன தான் இருந்தாலும் எழில் இப்படி சொல்லியிருக்க கூடாது என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஜெனி இப்ப கொஞ்ச நாளாகவே வீட்டில பிரச்சனையாத் தான் இருக்கு என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!