நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. அதில் அவர், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்தித்ததாகவும், அப்போது தனது இயக்கத்தில் வெளியான கருப்பு படத்தின் வெற்றியைப் பற்றி முதலமைச்சர் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “கருப்பு திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்திற்கும், ஓடிடியில் பார்க்கும் அனுபவத்திற்கும் வித்தியாசம் இருக்கும். ஓடிடியில் பார்க்கும் போது சில குறைகள் பார்வையாளர்களின் கவனத்திற்கு வரலாம்.

ஆனால் அந்த குறைகளைத் தாண்டி படத்தில் பல சிறப்பம்சங்களும் உள்ளன. கதாபாத்திரங்களின் பயணம், உணர்வுபூர்வமான காட்சிகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நடிகர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ரசித்து மகிழ வேண்டும்.” என்று கூறினார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா நடித்துள்ள கருப்பு திரைப்படம் கடந்த மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
விமர்சகர்களிடமிருந்தும் நல்ல கருத்துகளை பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!