• Apr 24 2026

பாக்கியத்தின் வார்த்தையால் நிலைகுலைந்து நிற்கும் மயில்... டுடே எபிசொட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாக்கியம் மயில் கிட்ட போய் கோர்ட்டில எதுக்காக அமைதியா இருந்த என்று சொல்லிப் பேசுறார். மேலும், அடுத்த தடவை கோர்ட்டுக்கு போகும் போது விவாகரத்து வந்திடும் அதை வாங்கிட்டு இந்த  வீட்டிலேயே இரு என்கிறார் பாக்கியம். அதைக் கேட்ட மயில் எல்லாப் பழியையும் என் மேல போடாத நீ சொன்னத தானே நான் செய்தேன் என்கிறார்.


அதைத் தொடர்ந்து மயில் வீட்டை விட்டு வெளியே கிளம்புறார். மறுபக்கம் சரவணன் பாண்டியன் கிட்ட மயில் கூட எல்லாம் என்னால சேர்ந்து வாழ முடியாது என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் இந்த விஷயத்தில உனக்கு எப்படி ஆறுதல் சொல்லுறது என்றே எனக்குத் தெரியல என்கிறார். மேலும், உன்ர நல்ல மனசுக்கு எப்பவுமே நல்லது தான் நடக்கும் என்கிறார் பாண்டியன்.

அதை அடுத்து மயில் கடைக்குப் போய் சரவணனைப் பார்த்து வீட்டில என்னால இருக்கவே முடியல... நான் பண்ணது எல்லாம் தப்புத் தான், நான் இனிமே என்ன பண்ணா ஏத்துப்பிங்க என்று கேட்கிறார். அதுக்கு, சரவணன் என்னால உன்னை ஏத்துக்கவே முடியாது என்கிறார். பின் மயிலை இங்க இருந்து கிளம்பு என்கிறார் சரவணன். 

அந்த நேரம் பார்த்து அஞ்சலி கடைக்குப் போய் சரவணனைப் பார்த்து இங்க என்ன நடக்குது என்று சொல்லிக் கேட்கிறார். அதுக்கு சரவணன் இங்க ஒரு பிரச்சனையும் இல்ல நீ வீட்டுக்குப் போ என்கிறார். அதைத் தொடர்ந்து மயில் எல்லாத்தையும் நினைத்துப் பார்த்து அழுது கொண்டு ரோட்டில நடந்து போறார். அதைப் பார்த்த மீனா என்ன நடந்த என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement