• May 03 2026

சமந்தாவைப் பார்த்ததும் நாகசைதன்யா செய்தது என்ன? சுனில் நரங் மகள் திருமணத்தில் கசிந்த தகவல்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சமந்தா ரூத் பிரபு மற்றும் நாகசைதன்யா இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்து பிரிந்தது பெரும் பேசுபொருளாக இருந்தது. 

அதன் பின்னர், நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மறுபுறம், சமந்தாவும் தனது வாழ்க்கையில் முன்னேறி, இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் சுனில் நரங் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் நாக சைதன்யா தங்களது புதிய துணைகளுடன் தனித்தனியாக கலந்து கொண்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இதனால் இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்பு பெற்றது. விவாகரத்துக்கு பிறகு ஒரே மேடையில் இருவரும் தோன்றிய தருணங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement