• Jun 24 2026

ஜூம் பண்ணிப் பார்த்தா எல்லாமே புரியுமா? சுசித்ரா கிளப்பிய புதிய சர்ச்சை

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் திரிஷா ஒரே ஃபிரேமில் இடம்பெற்றிருந்த அந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதோடு, மறுபுறம் பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

இந்த நிலையில், பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படம் குறித்து பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.

அதில் பேசிய சுசித்ரா, திரிஷாஅக்கா போட்டது ஏஐ ஜெனரேட்டட் போட்டோவான்னு எனக்கு டவுட்டா இருக்கு. நான் ஒன்னும் பெரிய ஏஐ எக்ஸ்பர்ட் இல்லை. ஆனா ஒரு காமன் பர்சனா பார்த்தா அந்த ஷர்ட்டே நேச்சுரலா தெரியல. காலர், ஃபேப்ரிக் எதுவுமே இயற்கையாக இல்ல. எல்லாமே 2D மாதிரி இருக்கு. கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க என்று கூறியுள்ளார்.


மேலும்  விஜய்யோட பழைய போட்டோக்களை எடுத்துப் பாருங்க. ஷர்ட் எப்படி ஃபிட் ஆகும், ஷோல்டர் எப்படி இருக்கும் என்று தெரியும். ஆனா இந்த போட்டோவில் அது மாதிரி தெரியல. இந்த முகமும் அவர் அசெம்பிளியில் இருந்தபோது எடுத்த ஸ்டில்ஸ் மாதிரி இருக்கு. அந்த மாதிரி நிறைய போட்டோக்கள் இணையத்தில் இருக்கு என்றும் தெரிவித்தார்.

எனக்கு முதலில் சந்தேகம் வந்ததே அந்த ஃபேப்ரிக்கும் டேபிளும் பிளெண்ட் ஆன மாதிரி இருந்ததால்தான். ரியல் போட்டோவாக இருந்தா ஷர்ட்டோட ரிங்கிள்ஸ் தெளிவா தெரியும். ஆனா இங்க ஷர்ட்டும் டேபிளும் கலந்த மாதிரி இருக்கு. முகமும் கழுத்தும் அட்டாச் பண்ண மாதிரி தெரிகிறது என்று தனது பார்வையை பகிர்ந்துள்ளார்.

அதோடு நிற்காமல், உண்மையிலேயே இது ஏஐ இமேஜா என்ற டவுட் இப்ப நிறைய பேருக்கு வந்திருக்கு. அதே நேரத்தில் திரிஷா ஏன் இந்த போட்டோவை வெளியிட்டார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இருப்பினும், சுசித்ரா கூறியவை அவரது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே. திரிஷா வெளியிட்ட புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதற்கோ அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதற்கோ எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement