பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணன் கடையில் சோகமாக இருக்கிறதை பார்த்த பாண்டியன் என்ன நடந்த ஏதும் பிரச்சனையா என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் ஒன்னும் இல்ல என்று சொல்லி சமாளிக்கிறார். மறுபக்கம் ராஜி ஒழுங்கா தோசை சுடுறதைப் பார்த்த கதிர் பாராட்டித் தள்ளுறார். அந்த நேரம் பார்த்து அங்க கோமதி வந்து கதிரைப் பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிற என்று கேட்கிறார்.
பின் ராஜி சுட்ட தோசையைப் பார்த்த கோமதி கதிருக்கு இப்படி சுடுற தோசை எல்லாம் புடிக்காது என்கிறார். அதுக்கு, ராஜி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அவன் சாப்பிடுறான் என்று சொன்னதைக் கேட்ட உடனே கோமதி ஷாக் ஆகுறார். அதைத் தொடர்ந்து அஞ்சலி கோவிலில பாக்கியம் சொன்னதையே நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பாக்கியம் அஞ்சலி வீட்ட வந்து நடந்த எல்லாத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட அஞ்சலியோட அப்பா, அம்மா ஷாக் ஆகுறார்கள். மறுபக்கம் அஞ்சலி அழுது கொண்டிருக்கிறார். அப்படியே கொஞ்ச நேரம் எல்லாரும் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள்.
பின் அஞ்சலியோட அப்பா பாண்டியனோட கடைக்குப் போய் சரவணனைப் பார்த்து பாக்கியம் வீட்ட வந்து பேசினது எல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட பாண்டியன் நடந்தது எல்லாத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!