• Jun 15 2026

விஜய் ஜெயித்ததும் நண்டு, நசுக்கான்கள் எல்லாம் குறுக்க மறுக்க ஓடித் திரியுதா.? ப்ளூ சட்டை

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல முகங்களைக் கொண்ட ராகவா லாரன்ஸ், சமீபகாலமாக அரசியல் களத்திலும் தனது அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். 

தனது அரசியல் வருகையை வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்த அவர், ரசிகர்களின் கருத்துக்களையும் வரவேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணையக்கூடும் என்ற தகவல்களும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், புதிய ஆட்சிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சில உதாரணங்களை கூறியிருந்தார். புதிய இடத்திற்குச் செல்லும் ஒருவரை அங்குள்ள சூழல் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது என்பதையும், அதனை புரிந்துகொண்டு செயல்பட சிறிது காலம் தேவைப்படும் என்பதையும் விளக்க முயன்ற அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.


ஆனால், அந்த உரையில் இடம்பெற்ற சில வார்த்தைகள் தனியாக பகிரப்பட்டதையடுத்து, பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழத் தொடங்கின. குறிப்பாக, மக்களை இழிவுபடுத்தும் விதமாக அவர் தெருநாயை வைத்து உதாரணமாக கூறிய அந்த கருத்து அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் வெளியிட்டனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும், சினிமா ரசிகர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை தொடர்பாக பிரபல சின்னத்திரை நடிகரும், தமிழக வெற்றிக்கழக ஆதரவாளருமான தாடி பாலாஜியும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். வீடியோ ஒன்றின் மூலம் பேசிய அவர், ராகவா லாரன்ஸ் மீது தனிப்பட்ட மரியாதையும் ஆதரவும் இருப்பதாக தெரிவித்ததோடு, பொதுவெளியில் பேசப்படும் வார்த்தைகள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசியலுக்குள் வர முடிவு செய்த பிறகு ஒவ்வொரு கருத்தும் ஆயிரக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எளிய உதாரணமாக இருந்தாலும் தவறாக புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.


பலருக்கு உதவிக்கரம் நீட்டிய சமூக அக்கறை கொண்ட ஒருவராக அறியப்படும் ராகவா லாரன்ஸ் போன்றவர், மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வகையில் பேசக்கூடாது என்றும் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஒரு தலைவரையோ அல்லது ஒரு அரசியல் இயக்கத்தையோ ஆதரிக்கும் நபர்கள் பேசும் கருத்துக்கள், அந்த கட்சியின் மீதும் அதன் தலைமையின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இது போன்ற சர்ச்சைகள் தேவையற்ற பாதிப்புகளை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களிடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பை கருத்தில் கொண்ட ராகவா லாரன்ஸ், தனது கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில்,  ராகவா லாரன்ஸின் இந்த விவகாரம் தொடர்பில் பல கருத்துக்களும் எழுந்து வருகின்றது. இதற்கிடையில் பிரபல பத்திரிகை விமர்சிகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பதிவில் ' விஜய் ஜெயித்த பிறகு கோடம்பாக்கத்தின் நண்டு, நசுக்கான்கள் முதல் மார்க்கெட் இல்லாத பழைய நடிகர்கள் வரை.. தினமும் அரசியல் களத்தில் குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்..' என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய பதிவு சமூக வலைதள பக்கங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisement

Advertisement