• May 02 2026

இருண்ட சுரங்கத்தில் தெரிந்த வெளிச்சம்! - துருவ நட்சத்திரம் சிக்கல்கள் தீர்ந்தது..

shali / 4 hours ago

Advertisement

Listen News!

பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து இழுபறியில் இருந்து வந்தது. விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிம்ரன், ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ளார்.


பாடல்களை தாமரை எழுதியுள்ள நிலையில், இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளதால், இப்படத்தின் இசைக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடக்கம் முதலே நிதி சிக்கல்கள், சட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட பல தடைகளை சந்தித்த இப்படம், வெளியீடு குறித்து பலமுறை அறிவிக்கப்பட்டும் தள்ளிப்போனது. குறிப்பாக, தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருக்கும் கௌதம் மேனனுக்கு இந்த தாமதம் பெரிய சவாலாக இருந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டிற்கு வழி திறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டப் போராட்டத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி வழங்கிய தீர்ப்பு, இந்த படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து கௌதம் மேனன் தனது சமூக வலைதளத்தில், “இது இருண்ட சுரங்கப்பாதையில் வெளிச்சம் தருவது போல.. திரைத்துறையின் நிதி சிக்கல்களுக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணம்.” என பதிவு செய்துள்ளார்.

இதனால், நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் ‘துருவ நட்சத்திரம்’ விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement