• Apr 18 2026

40 கோடி ரூபாய் டீலை தூக்கியெறிந்த பாலிவுட் நடிகர்.! மனதை உருக வைக்கும் பின்னணி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் பிரபல நடிகரான சுனில் ஷெட்டி தர்பார், 12 பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நேர்மையும் குடும்பத்தின் கொள்கைகளும் தான் பணத்தைவிட முக்கியம் என்று தெரிவித்துள்ளார். தற்பொழுது அவருடைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன்படி அதில் அவர் கூறுகையில்,  புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்திற்காக என்னை அணுகினார்கள். அதற்கு 40 கோடி தருவதாகவும் கூறினார்கள். ஆனால் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது என்று மறுத்துவிட்டேன்.  


இப்போது இவ்வாறான விளம்பரங்களில் என்னை நடிக்க யாரும் அணுகுவதில்லை. சில கோடி ரூபாய்களுக்காக என் லட்சியங்களில் சமரசம் செய்ய மாட்டேன். 

2014ஆம் ஆண்டு எனது தந்தை மரணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.  6,7 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்புவது சவால் ஆனது. 

இப்போது சினிமாவில் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. அந்த மாற்றங்களை புரிந்து கொள்ள எனக்கு நேரம் எடுத்துக் கொண்டது என்று தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement