• Apr 17 2025

விடாமுயற்சி படம் அஜித்குமாரின் இமேஜ்ஜை உடைக்குமா..?அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் good bad ugly ,விடாமுயற்சி என இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு போட்டி போட்டு வரும் நிலையில் முதலில் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படம் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இப் படத்தினை பார்வையிட்டவர்கள் படம் ரிலீஸ் ஆனதும் உலகிலுள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி மகிழ் திருமேனியை திட்டுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளனர். மற்றும் சூட்டிங் ஸ்பாட்டில் இடம்பெற்ற சில கசப்பான நிலைகளினால் அஜித் மற்றும் மகிழ் திருமேனியின் கூட்டணி மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற ஒரு செய்தியும் பரவி வருகின்றது.


விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்தின் இமேஜை இயக்குநர் மிகவும் கேவலமாக காட்டியுள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இது அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.படம் எவ்வளவு தான் ஹிட் ஆனாலும் குறித்த ஒரு பகுதி இயக்குநரின் மேல் வெறுப்பை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement