• Dec 26 2024

நயன்தாராவுக்கு நடந்த 4 வகை ட்ரீட்மெண்ட்.. பிரபல மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகும் போது இருந்த லுக் மற்றும் தற்போதைய லுக் என இரண்டிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை அடுத்து பிரபல தோல் மருத்துவர் ஒருவர் அவர் இந்த நான்கு வகை ட்ரீட்மென்ட் செய்திருக்கலாம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகைகள் தங்கள் தோற்றத்தை அழகாக மாற்றுவதற்காக அறுவை சிகிச்சை உட்பட சில சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும். அந்த வகையில் நடிகை நயன்தாரா ’ஐயா’ ‘சந்திரமுகி’ படங்களில் இருந்த தோற்றத்திற்கும் இப்போது இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ள நிலையில் இதுகுறித்து பிரபல தோல் மருத்துவர் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் ’நடிகை நயன்தாரா முதலில் உடல் எடையை குறைத்துள்ளார். எனவே அவரது தோற்றம் கொஞ்சம் மாறி உள்ளது. அதேபோல் அவர் தனது புருவத்தையும் மாற்றியுள்ளார்.

மேலும் அவருடைய மூக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கலாம், அதனால்தான் பழைய படத்திற்கும் இப்போது உள்ள படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் அவருடைய கன்னம் பெரிதாக இருக்கும், ஆனால் தற்போது கன்னம் ஒட்டியுள்ளது. அதை அறுவை சிகிச்சை செய்தோ அல்லது வேறு சிகிச்சை மூலம் கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைத்து இருக்கலாம்.

இந்த நான்கு ட்ரீட்மென்ட் மூலம் தான் நயன்தாரா வித்தியாசமான தோற்றத்தில் தற்போது உள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். நயன்தாரா மட்டுமின்றி அதிதிராவ் ஹைத்ரி, சமந்தா உள்பட  பல நடிகைகள் இதேபோன்று அறுவை சிகிச்சை அல்லது குறிப்பிட்ட சில டிரீட்மென்ட் எடுத்து இருக்கலாம் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement