பிக்பாஸ் சீசன் 8 இன் சிங்கப்பெண் ஜாக்குலின் அவர்கள் தற்போது நடைபெற்ற பணப்பெட்டி டாஸ்க்கில் மிகவும் அருமையாக விளையாடி தீவிரமாக முயற்சி செய்து பணப்பெட்டி எடுத்து வந்திருப்பினும் இரண்டு விநாடிகள் தாமதமாக வந்தமையின் காரணமாக eliminate ஆகி வெளியேறினார்.அவர் போகும்போது கூட இந்த வீட்ல இருக்கிற பெண்களுக்கும் சரி வெளியிற இருக்கிற பெண்களும் சரி முடியாது என்று எதுவும் இல்லை முயற்சி செய்தால் எதுவும் வீண் போகாது என ஒரு வாசகத்தை கூறி வெளியேறினார்.
ஜாக்குலின் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார் இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ்த் தொடரான கன காணும் காலங்கள் மூலம் அறிமுகமானார்.1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பண்ணூர் கிராமத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை ST இல் படித்தார் பின்னர் தனது மேல்நிலைப்படிப்புகளை சென்னையில் உள்ள மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிமற்றும் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர் 3 வருடங்கள் பிக்பாஸ் போவதற்காக try பண்ணி தற்போது சென்று மிகவும் சிறந்த தனித்துவமான போட்டியாளராக 100 நாட்கள் விளையாடி வெளியேறியுள்ளார்.தொடர்ந்து 15 வாரங்களாக நாமினேஷனில் இருந்து வந்த ஜாக்குலின் ஒவ்வொரு வாரமும் மக்களால் காப்பாற்றப்பட்டு வீட்டுக்குள் இருந்த இவர் இறுதி நேரத்தில் முயற்சி பலனின்றி வெளியேறியது அவரது ரசிகர்கள் உட்பட சக போட்டியாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அப்பாவின் துணையின்றி அம்மா வளர்ப்பில் வளர்ந்த இவங்க தற்போது அம்மா தங்கச்சி தம்பி என முழு குடும்பத்தையும் தனது சொந்த உழைப்பில் பாத்துட்டு வராங்க ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்பட்ட ஜாக்குலின் தற்போது பிக்பாஸ் வரலாற்றின் சாதனைக்குரிய பெண்ணாக மாறியுள்ளார்.
air hoster,தொகுப்பாளினி,நடிகை ,காமெடியன் என பல பாதைகளில் சாதனை படைத்துவரும் ஜாக்குலின் தற்போது பிக்பாஸ் சீசன் 8 இன் மூலம் சிறந்த ஒரு தைரியமான பெண் என்பதையும் நிரூபித்துள்ளார்.மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.பல ஆசைகளுடன் final மேடையில் முத்து உன்னோட கையையும் என்னோட கையையும் சேது சார் பிடிச்சிருப்பார் கடைசியில ஜாக்குலின் தான் வின்னர் என அறிவிப்பார் என விளையாட்டாக அடிக்கடி சொல்லி இருக்பார் ஆனால் தற்போது மிகவும் மனமுடைந்து வெளியேறியுள்ளார்.
ஒரு வயது இருக்கும் போதே அப்பாவை இழந்த இவங்க உருவக்கேலி செய்யப்பட்டு வந்தாங்க சின்ன வயசில இருக்கும் போதே பேசுறதுக்கு ரொம்ப ஆர்வம் காட்டியிருக்கிறார்.sk,dd ,அர்ச்சனா போன்ற தொகுப்பாளர்களை ரோல் மாடலாக வைத்திருந்த இவர் அவங்களை பார்த்து பேசுவது எப்படி நகைச்சுவையாக நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவது போன்ற விடயங்களை கத்துக்கொண்டாராம் அது மட்டுமல்லாமல் இவருக்கு எல்லவிதத்திலையும் ஒரு தூணாக இருந்தது அவங்க அம்மா தான் அவங்க கூட பிக்பாஸ் வந்து மிகவும் அழகாக பேசியிருப்பாங்க.
பார்ப்பதற்கு விஜய் டிவி பிரியங்கா மாதிரி இருக்கும் இவர் நயன்தாராவின் தீவிர நடிகை என்பதும் நயன்தாராவுடன் இணைந்து கோல மாவு கோகிலா படத்தில் நயனுக்கு தங்கச்சியா மிகவும் அருமையாக நடித்திருந்தார்.நடிப்புக்காக எதையும் செய்யும் இவர் தனது சக தொகுப்பாளர் ரக்சனுக்காக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திலும் ஒரு பகுதியில் மிகவும் அருமையாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீரியஸான கதாபாத்திரங்களில் நடிப்பதாக முடிவெடுத்துள்ள இவர் தற்போது கிவி எனும் படத்திலும் நடித்துள்ளார்.இவரது வெளியேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அதிக ரசிகர்கள் மற்றும் மக்களை சம்பாத்தித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் இவர் பிக்போஸ் இல் இருந்து வெளியேறும் போது ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட tdroffy அவருக்காகவே பரிசாக இறுதியில் வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் பல விமர்சனங்களையும் தாண்டி தற்போது தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டி வாழ்வில் பெரிய ஒரு வெற்றியை பெற்றுள்ள ஜாக்குலின் இன்னும் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
Listen News!