• Dec 27 2024

லட்சக்கணக்கில் காசு கொடுத்து குட்டி வாங்கிய வித்யுலேகா ராமன்.. வைரல் வீடியோ

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

லட்சக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய ஒரு பொருளுக்கு நடிகை வித்யூலேகா ராமன் குட்டி என்று பெயர் வைத்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகைகளில் ஒருவர் வித்யுலேகா ராமன் என்பதும் இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பின்னர்’ தீயா வேலை செய்யணும் குமாரு’ ’ஜில்லா’ ’வீரம்’ ’காக்கி சட்டை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் ’குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்த இவர் மூன்றாவது ரன்னர் அப் இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் வித்யூலேகா ராமனுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது கணவருடன் சென்று எலக்ட்ரிக் கார் வாங்கிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சென்னை டிராபிக்கில் இந்த கார் தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் இந்த காரைத்தான் மிகவும் விரும்புவதாகவும் இதற்கு குட்டி என்று பெயர் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து பலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement