• Apr 25 2026

நடிகர் ரிஷப்ஷெட்டிக்கு ஆசீர்வாதம் வழங்கிய பஞ்சுருளி தெய்வம்.! வைரலான வீடியோ.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட உலகில் சமீபத்தில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்திய படங்களாக ‘காந்தாரா’ மற்றும் அதன் முன்னோடி கதையாக வெளிவந்த ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகியவை திகழ்கின்றன.


நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கியும் நடித்தும் உருவான இந்த இரண்டு திரைப்படங்களும், கர்நாடகாவின் பாரம்பரியம், அடையாளம், கலாச்சாரம் மற்றும் உள்ளூர் தெய்வ வழிபாட்டு முறைகளைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படங்கள், கர்நாடகாவில் மட்டுமின்றி நாடு முழுவதும், மேலும் சர்வதேச அளவிலும், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, துளு இன மக்களால் புனித தெய்வமாக வணங்கப்படும் ‘பஞ்சுருளி’ தெய்வத்தைக் கதையம்சமாகக் கொண்டு உருவாக்கியுள்ளமை, திரைப்படத்திற்கு தனித்துவம் மற்றும் ஆழமான கலாச்சாரத் தடத்தை அமைத்துக் கொடுத்தது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து, உண்மையான பஞ்சுருளி கோலா நிகழ்ச்சிக்கு படக்குழுவினர் அழைக்கப்பட்டனர். கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் நடைபெறும் இந்த கோலா நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, பஞ்சுருளி தெய்வ பாத்திரம் ஏற்ற நபர், திடீரென ரிஷப் ஷெட்டி அருகே சென்று, “நீ கண்ணீர் விட வேண்டாம்… நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார். 

அங்கு இருந்த பலரும் அந்த தருணத்தை மொபைல் மூலம் பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement