• Dec 28 2024

செம்ம கிளாமரில் அனிதா குப்புசாமியின் டாக்டர் மகள்.. சாய் பல்லவி போல் நடிகை ஆகலாமே ..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி டாக்டராக இருக்கும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் வீடியோவை பதிவு செய்த நிலையில் சாய் பல்லவி போல் நீங்களும் நடிகை ஆகலாமே என கமெண்ட் பதிவாகி வருகிறது.

புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதிகள் கிராமிய பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்றவர்கள் என்பதும் பல மேடை கச்சேரிகளிலும் சில திரைப்படங்களிலும் இவர்கள் பாடல்கள் பாடி உள்ளனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் குப்புசாமி - அனிதா தம்பதிகளின் மகள் பல்லவி டாக்டருக்கு படித்துள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் பிரபலம் என்பதும் இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் டாக்டர் பல்லவி தென்மேற்கு துருக்கியில் உள்ள அனல் நீரூற்று பகுதிக்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு எடுத்த ஒரு கிளாமர் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த அவருடைய ஃபாலோயர்கள் டாக்டராக இருந்தாலும் செம கிளாமராக இருக்கிறீர்கள், சாய் பல்லவி போல் நீங்களும் திரைப்படங்களில் நடிக்க வரலாம்’ என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர். டாக்டர் பல்லவியின் இந்த பதிவும், ஃபாலோயர்கள் கமெண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement