• Apr 19 2026

பொய் கம்பிளைன்ட் வலையில் கோமதி குடும்பம்… இன்ஸ்பெக்டர் கேள்வியால் அதிர்ந்த சக்திவேல்

shali / 3 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி முத்துவேலைப் பார்த்து எங்க நிலமையைப் பார்த்தியா அண்ணா.. என்று சொல்லி அழுகிறார். அதைப் பார்த்த சக்திவேல் என்ன பிரச்சனை என்று சொன்னாத் தானே தெரியும் என்று சொல்லிட்டு கோமதி கையைப் பிடிக்கிறார். அதுக்கு கோமதி எனக்கும் ஒன்னும் புரியல ஆனா, நாங்க எந்த தப்பும் பண்ணல என்கிறார். 


பின் முத்துவேல் போய் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறார். அதனைத் தொடர்ந்து சக்திவேல் பெண்களை வீட்டில விசாரிச்சால் போதாதா ஸ்டேஷன் வரை கூட்டிட்டு வரணுமா என்று கேட்கிறார். அதுக்கு இன்ஸ்பெக்டர் அவங்க மருமகள் வீட்டில இருந்து தான் கம்பிளைன்ட் கொடுத்திருக்காங்க என்கிறார். மேலும், இந்தக் கம்பிளைன்ட் பொய் என்றால் அவங்க எதுக்காக பயப்படணும் என்று கேட்கிறார் இன்ஸ்பெக்டர்.

அதனை அடுத்து முத்துவேலை இங்கிருந்து கிளம்ப சொல்லுறார் இன்ஸ்பெக்டர். மறுபக்கம், பாக்கியம் மயில் கிட்ட நீ பயப்பிடாத விவாகரத்து நடக்காம இருக்க என்ன பண்ணேலுமோ அதை செய்திட்டு வந்திட்டோம் என்கிறார். நடந்த விஷயத்தைக் கேட்ட மயில் உடனே ஷாக் ஆகி ஏன் இப்புடி எல்லாம் செய்தீங்க என்று கேட்கிறார். மேலும் தப்பு பண்ணது நாங்க அப்புறம் எப்படி அவங்க மேல கம்பிளைன்ட் கொடுக்கிறது என்று கேட்கிறார்.


பின் பாக்கியம் அவங்க வழியில போய்த் தான் இந்தப் பிரச்சனையை முடிக்கணும் என்கிறார். அதைக் கேட்ட மயில் நாம இப்படி பொய் கம்பிளைன்ட் கொடுக்கிறது எல்லாம் தப்பு என்கிறார். அதனை அடுத்து குமார் பழனி கிட்ட போய் கோமதி வீட்ட இருந்த எல்லாரையும் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு போய்ட்டாங்க என்கிறார். அதைக் கேட்ட பழனி உடனே ஸ்டேஷனுக்கு கிளம்புறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement