விஜய் - சங்கீதா தொடர்பான விவாகரத்து விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.
சங்கீதா தாக்கல் செய்ததாக கூறப்படும் விவாகரத்து மனுவில், விஜய்க்கு ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குறிப்பிடப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார் என்றே பல ரசிகர்கள் நம்பி வந்த நிலையில், சங்கீதாவின் விவாகரத்து மனு வெளியாகியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1999ஆம் ஆண்டு நடிகர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட சங்கீதா, ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகளை வளர்த்து வந்தார். எனினும், ஆரம்பத்தில் சாலிகிராமம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த விஜய், பின்னர் நீலாங்கரையில் வீடு கட்டி அங்கு நீண்ட காலமாக வாழ்ந்து வந்தார்.

சென்னையில் விஜய்க்கு நீலாங்கரை பங்களா, பனையூர் பங்களா மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள சொகுசு அபார்ட்மெண்ட் உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்ந்த திருமண விழாவில் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒன்றாக கலந்து கொண்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளர் திவ்யா கணேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், அது ஒரு திருமண நிகழ்ச்சி. திருமணம் என்றால் ஆயிரம் பேர் வரத்தான் செய்வார்கள். தெரிந்த இரண்டு பேர் வந்தால் ஹாய் சொல்லி சேர்ந்து போவார்கள்தானே. அதுவும் மீறி அதெல்லாம் அவர்கள் பெர்சனல் என கூறியுள்ளார்.
Listen News!